உலகளாவிய பாலிவுட் ரசிகர்களின் "மோஸ்ட் வான்டட் ஹீரோ" ஷாரூக் கான் நியூஜெர்ஸி விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் இம்மிகிரேஷன் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டடு சோதனைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்!!
விதிகளுக்கு உட்பட்ட சந்தேகக் காரணங்களால் இரண்டாம் கட்ட இமிகிரேஷன் சோதனைக்கு ஆட்படுத்தப் பட்டவர்களின் பட்டியலில் ஒரு சூப்பர் ஸ்டார் மாட்டிக் கொண்டது துரதிர்ஷ்டமே!! மிகவும் பொதுப்படையான பெயரைக் கொண்டிருப்பதால் இரண்டாம் கட்ட குடியேற்ற சோதனைக்கு ஆட்படுத்தப்பட்டார் என்பது அமெரிக்க அதிகாரிகளின் விளக்கம்...ஆனால் "இதுவரைத் தன் வாழ்வில் "ஷா ருக்" எனும் பெயரில் வேறு எந்தவொரு மனிதரையும் நான் சந்தித்ததேயில்லை அப்படியிருக்க எப்படிப் பொதுவான பெயராகக் கருத முடியும்?" இது ஷாரூக்கின் வாதம்... பிரச்னை "ஷாரூக்" இல் இல்லை இரண்டாவது பெயர் "கான்" இல் தான் இருந்திருக்கிறது!!!
"என் பெயர் கான்"(My Name is Khan) இதுதான் கரண் ஜோகர் இயக்கத்தில் ஷாருக் நடித்துக்கொண்டிருக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஷாருக்கானின் அடுத்த படத்தின் பெயர்.... ஆனால் பாவம் இவர் பெயர் கான் என்று சந்தேகிக்கப் பட்டதாலேயே இவ்வளவு இன்னல்களை சந்தித்திருக்கிறார் மிஸ்டர். கான்!!
அமெரிக்க அதிகாரிகளைச் சொல்லியும் குற்றமில்லைதான்... அனைத்து விஜயகாந்த் பட வில்லன்களின் பெயரும் அநேகமாகக் "கான்" என்றுதானே முடிந்துத் தொலைக்கிறது!! உலகளாவிய பயங்கரவாதப் போர்களினால் ஒட்டுமொத்தமாக ஒரு மதத்தின் பெயரால் ஒரு சமூகமே துன்புறுவது வேதனையாக இருந்தாலும் அதற்கான பதிலைப் பாதிக்கப்படும் பொதுமக்கள் அந்த மதத்தின் பெயரால் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் வன்முறையாளர்களிடம்தான் கேட்க முடியும்...
சரி.. மாட்டிக்கொண்ட ஷாருக்கிடம் வருவோம்.... பயணம் செய்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஏற்கெனவே ஷாரூக்கின் லக்கேஜ்களைக் கொண்டுவருவதில் தாமதம் நேர்ந்திருக்கிறது எனவே நிச்சியம் நொந்து நூடுல்ஸாகத் தான் இமிகிரேஷனுக்கே சென்றிருப்பார் ஷாருக்... அவரின் போர்ட்(Boarded) செய்யப்பட்ட உடமைகள் மட்டுமன்றி ஹேண்ட் லக்கேஜ்களையும் கூட சோதனை செய்திருக்கிறார்கள் அதிகாரிகள்... "நான் ஒரு நடிகன்... இங்கு அட்லாண்டிக் சிட்டியில் ஒரு ஷோ வுக்காகத்தான் வந்திருக்கிறேன்" என்று சட்டம் தன் கடமையைச் செய்துகொண்டிருக்கும் போது அப்பாவியாகப் புலம்பியிருக்கிறார் "கிங் கான்"!!
"நான் மிகவும் அசௌகரியப்பட்டேன்... மிகவும் கோபமாகவும் எரிச்சலாகவும் உணர்ந்தேன்... நல்லவேளை என் குடும்பத்துடன் நான் வரவில்லை, வந்திருந்தால் என்னென்ன இன்னல்களுக்கு ஆளாகியிருப்பேனோ!!... சுதந்திர தினத்தன்று எனது சுதந்திர இந்தியாவிலேயே நான் இருந்திருக்கலாம் போலும்!!" என்றெல்லாம் நொடித்துப் போய் இப்பொழுது முத்துதிர்த்திருக்கும் ஷாருக்... இவ்வாறு நடப்பது முதன்முறையல்ல எப்போதுமே அமெரிக்கா செல்லும்போது தான் அசௌகரியங்களுக்கு ஆட்படுவதாகவும் முணகித் தீர்த்திருக்கிறார்....!!
ஷாரூக்கிற்கு ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்.... "அமெரிக்கா செல்லும்போதெல்லாமே நான் கடும் அசௌகரியங்களுக்கு ஆளாகிறேன்" என்று இப்பொழுது கதறும் பாலிவுட் பாட்ஷா... சில வருடங்களுக்கு முன்பு பூச்சி மருந்து கலப்பு போன்ற குற்றச்சாட்டுகளால் பெப்ஸியை இந்தியாவில் தடை செய்யக்கோரி மாணவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஒட்டுமொத்தமாகக் கிளர்ந்தெழுந்தபோது இதே ஷாரூக் கான்,
"பெப்ஸியை இந்தியாவில் தடைசெய்தால் நான் அமெரிக்கா சென்று பெப்ஸி பானங்களைப் பருகுவேன்!" என்று நிரந்தர பிராண்ட் அம்பாஸிடராக ஆண்டுதோறும் கூலி கொடுத்த அமெரிக்க முதலாளிகளுக்காக முந்திக்கொண்டு வந்து ஜால்ரா அடித்தார்... அடுத்தமுறை மீண்டும் பெப்ஸிக்குப் பிரச்னை வந்தால் தங்கள் பெயருக்குப் பின்னால் உள்ள "கானை" நீக்கிக்கொண்டு அமெரிக்கா போய் பெப்ஸி குடிப்பீங்களா ஷாருக் சார்??!!
டெயில் பீஸ்:இதே அமெரிக்க விமானதளத்தில் "மொஹமத் குட்டி" என்ற இயற்பெயர் தாங்கியதால் நம்ம "தளபதி தேவராஜ்" மம்முட்டியும் இதேபோன்றதொரு அசௌகரியத்துக்கு ஆளாகியிருக்கிறார் ஆனால் அவர் இதைப் பற்றி யாரிடமும் முணுமுணுத்துக் கொண்டிருக்கவில்லை.... உணர்ச்சி வேகத்தில் உளறித்தள்ளும் ஷாருக்கைப் பொறுத்தவரை யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் ஃப்ளாஷ்பேக்கால் சொல்லிழுக்குப் பட்டு!!
5 comments:
/
அமெரிக்க முதலாளிகளுக்காக முந்திக்கொண்டு வந்து ஜால்ரா அடித்தார்... அடுத்தமுறை மீண்டும் பெப்ஸிக்குப் பிரச்னை வந்தால் தங்கள் பெயருக்குப் பின்னால் உள்ள "கானை" நீக்கிக்கொண்டு அமெரிக்கா போய் பெப்ஸி குடிப்பீங்களா ஷாருக் சார்??!!
/
சூப்பரு :)
ஒரு செய்தி, இரு பார்வைகள்ன்னு இது ரெண்டையும் எடுத்து வேறே சக ப்ளாக்கர் யாராவது போட்டாலும் போடலாம்! பர்செப்ஷன்கள் மாறுபடுகிற போது சுவாரஸ்யம் மட்டுமில்லை, புது விஷயங்களும் கிடைக்கின்றன. ரசித்துப் படித்தேன்.
http://kgjawarlal.wordpress.com
Hi Friend, I enjoyed both the blogs.. Kgj agarwal sirs blog and yours. Enjoyed very much.. infact i ll go with ur perspective. Nice one.. Thanks Anantha
:) - nice!!!
Srini
very nice........
Post a Comment