செய்தித்தாள் படிக்க ஆரம்பித்து, கடைசிபக்க விளையாட்டுச் செய்திகளைத் தாண்டி நாட்டுநடப்புப் பக்கங்களையும் கவனிக்க ஆரம்பித்திருந்த பள்ளி நாட்களிலேயே புரிந்திருந்தது 33 ஒரு பெண்பால் எண் என்று!!
எப்பவும் 50 தானே கேட்பாங்க இதென்ன பாஸ்மார்க்கைவிட ரெண்டு கம்மியா 33 க்கு சண்ட போடுறாங்களே? என்ற ஒரு சந்தேகத்துக்கும், "இடஒதுக்கீடு" என்ற அரசியல் சார்ந்த சொல்லுக்கும் எனக்கு அர்த்தம் புரிந்தது நான் ஹைஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும்போது நடந்த ஓர் உள்ளாட்சித் தேர்தலின்போதுதான்....
காரணம் : அப்போது எங்கள் வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது!!
அதே எலக்ஷனில் மதுரையில் இன்னொரு பெண்கள் வார்டில் அமோக வெற்றி பெற்றவர்தான், நேர்மை மற்றும் தைரியம் என்னும் கூடாத காம்பினேஷனில் சில காரியங்கள் செய்ய முற்பட்டதால், வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெண் கவுன்சிலர் லீலாவதி...
இப்போது 33 சதவீதம் ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேறிய நாளில் நாடளுமன்றப் பெண் உறுப்பினர்களெல்லாம் கட்சிபேதம் மறந்து கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்களைப் பார்க்க நன்றாகத்தான் இருந்தது.....
" ஆண்கள் அதிகாரத்தில் அதிகளவு இருப்பதைத் தகர்க்க அந்நியநாடுகளின் சதி இது"
என்று நேற்று முத்துதிர்த்து இருக்கிறார் இந்த மசோதாவை எப்படியாவது (பெண்ணியத்துக்கு எதிரானவர்கள் எனும் முத்திரை வாங்கிடாமல்)தடுத்துவிடத் துடிதுடிக்கும் மூவரில் ஒருவரான முலாயம்சிங் யாதவ்.... இவர் எந்த ஹோட்டலில் ரூம் போட்டு யோசிக்கிறார் என்று தெரியவில்லை.... :-)
இது பெயரளவில் ஒரு சட்டமாக இயற்றப்பட்டுவிட்டு இதன் அடிப்படையில் பெண்களுக்கு அதிகளவில் தொகுதிகளை இடஒதுக்கீடு செய்வதினால் அரசியலில், ஏன் பெண்கள் சமூகத்துக்குமே கூட, பெரிதாய் என்ன மாற்றம் விதைக்கப் படப்போகிறது என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை...
இட ஒதுக்கீட்டினால் நம்முடைய மிஸ்டர்களுக்கு மிஸ்ஸாகப் போகும் தொகுதிகளை அவர்களின் மிசஸ்களை வைத்துக் கரெக்ட் செய்துகொள்ளப் போகிறார்கள்... அதுதானே பீகார் ராப்ரி முதல் மதுரை மாநகரம் வரை தொன்றுதொட்டு வழக்கம்!!
உலகில் எந்தவொரு நாட்டின் பார்லிமெண்டிலும் இல்லாத அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இந்தியாவில் இடம்பெறப் போவதின் சமுதாய மகத்துவம் என்ன்வென்று தெரிந்தவர்கள் விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.....
நட்புடன்,
13 comments:
//உலகில் எந்தவொரு நாட்டின் பார்லிமெண்டிலும் இல்லாத அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இந்தியாவில் இடம்பெறப் போவதின் சமுதாய மகத்துவம் என்ன்வென்று தெரிந்தவர்கள் விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....//
எல்லா அரசியல்வாதி வீட்டுப்பெண்கள் பாராளுமன்றத்தில் டம்மியாய் உட்காருவார்கள். மாயாவதி சீட்டைத்தேய்த்துக்கொண்டு இருப்பதுபோல :)
இட ஒதுக்கீட்டினால் நம்முடைய மிஸ்டர்களுக்கு மிஸ்ஸாகப் போகும் தொகுதிகளை அவர்களின் மிசஸ்களை வைத்துக் கரெக்ட் செய்துகொள்ளப் போகிறார்கள்... அதுதானே பீகார் ராப்ரி முதல் மதுரை மாநகரம் வரை தொன்றுதொட்டு வழக்கம்!!
.......... ha,ha,ha..... அப்படி ஒண்ணு இருக்கோ?
கார்டூன்லாம் போட்டு கலக்குறீங்க....
// இவர் எந்த ஹோட்டலில் ரூம் போட்டு யோசிக்கிறார் என்று தெரியவில்லை....//
நான் தங்கற ரூமுக்கு பக்கத்து ரூம்லதான் யோசிக்குறார்
:))
//சமுதாய மகத்துவம் என்ன்வென்று தெரிந்தவர்கள் விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.....//
எவ்வளவு நாளைக்குத்தான் ஆண் அரசியல்வாதிகளை நம்பி ஏமாறுவது? ஒரு மாறுதலுக்கு பெண் அரசியல்வாதிகள்.அவங்களும் என்ன பி.எச்டி படிச்சிட்டா வரப்போறாங்க.அதே கைநாட்டுக் கேசுங்கதான்.அப்பனோ, புருசனோ,அண்ணனோ முழுநேர அரசியல்வாதியா இருப்பான் அவன் நிக்க முடியாது போன தொகுதில இவங்களை நிப்பாட்டுவான்.சமுதாயம் முக்கியத்துவம்னு காமெடி பண்றீங்களே .
ஸ்ரீ அண்ணா..
Sarcastic ஆகத்தான் அப்படிக் கேட்டிருந்தேன்...
//அப்பனோ, புருசனோ,அண்ணனோ முழுநேர அரசியல்வாதியா இருப்பான் அவன் நிக்க முடியாது போன தொகுதில இவங்களை நிப்பாட்டுவான்//
இதையே தானே கார்ட்டூனிலும் அதற்கு முந்தைய பத்தியிலும் வெளிப்படுத்தியிருக்கிறேன்...
ரொம்ப வருஷமா இழுத்தடிச்சு இத நிறைவேற்றியிருக்காங்க நான் பாட்டுக்கு ஒரு கார்ட்டூனைப் போட்டு கலாய்ச்சா "உனக்கு மகளிர் மசோதாவின் மகத்துவம் தெரியுமா??"னு யாராவது கிளம்பிட்டாங்கன்னா!! அதுக்குதான் இப்படி ஒரு defense mechanism!! ;-)
நன்றி சித்ரா அக்கா!!
நன்றி சின்ன அம்மிணி அக்கா....
மாயாவதியின் ரூபாய் நோட்டு மாலையை டிவியில் பார்த்தீங்களா....
நான் அப்டியே ஷாக் ஆகிட்டேன்!! :)
நன்றி கண்ணா...
கல்லூரி நாட்களில் கார்ட்டூன் போட்டதுண்டு... இப்போ சும்மா எம்.எஸ் பெயிண்டில் ட்ரை பண்ணேன்.. நன்றி...
அது எந்த ஹோட்டல்னு சொல்லுங்களேன்.... பதிவெழுத ஒருதடவை நானும் யோசிச்சுப் பாக்குறேன் அங்கே ரூம் போட்டு!!
33%ஐ என் கோணத்திலும் பாருங்கள்...
http://sangeymuzangu.blogspot.com/2010/03/33.html
இட ஒதுக்கீட்டினால் நம்முடைய மிஸ்டர்களுக்கு மிஸ்ஸாகப் போகும் தொகுதிகளை அவர்களின் மிசஸ்களை வைத்துக் கரெக்ட் செய்துகொள்ளப் போகிறார்கள்... அதுதானே பீகார் ராப்ரி முதல் மதுரை மாநகரம் வரை தொன்றுதொட்டு வழக்கம்!!//
உண்மை பிரபு உங்கள் சொல் ஒவ்வொன்றும்
நன்றி அக்கா :)
கார்ட்டூன் ஓகே யா?? :))
வணக்கம் சங்கேமுழங்கு...
நிச்சியம் வாசிக்கிறேன் நண்பா...
போக..போக தெரியும்..அந்த பூவின் வாசம் புரியும்
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment