பிடித்த பத்துப் பெண்கள் - தொடர்பதிவு

தொடர்பதிவு.... ஒரு சுவாரஸ்யமான கான்செப்ட்.... "தொடர்பதிவு" என எழுதியிருக்கும் இடுகைகளை விரும்பிப் படிப்பது வழக்கம்.....

"ரசனை" எனும் ஒரு புள்ளியில்தானே இதயங்களே இணைகின்றன!!

அதிலும் "பிடித்தவை" ஒத்துப்போவதைவிட "பிடிக்காதவை" ஒத்துப்போவதில் இருக்கிற சுகம் இருக்கிறதே.. ஹாஹாஹா... அது மனித இயல்பு!! ;)

தொடர்பதிவில் பங்குபெறுவது இதுவே முதன்முறை... இன்றுகாலை தேனக்காவின் பதிவை வழக்கமான ஆர்வத்துடன் படித்துவிட்டுப் பின்னூட்டம் எழுத ஸ்க்ரோல் செய்த போது இனிய ஆச்சர்யமாக என் பெயர் இருந்தது ரிலே ரேசில் :)

இதோ இந்த இடுகையின் இணைப்போடு அவருக்குப் பின்னூட்டம் தரலாம் என்று இங்கு வந்துவிட்டேன்!!பிடித்த பத்துப் பெண்கள்:
குறிப்பு:

நான் வரிசைப்படி எல்லாம் எழுதவில்லை.... மனதில் தோன்ற தோன்ற ஒருவாறாகத் தொகுத்து எழுதியிருக்கிறேன் அவ்வளவுதான்... என்னடா ஸ்டெஃபி கிராஃபுக்குப் பிறகு அன்னை தெரஸாவை எழுதியிருக்கிறானே என்று கோபித்துக்கொள்ளவேண்டாம்


நிர்மலா டீச்சர்: 

இவுங்க என்னுடைய இரண்டாம் வகுப்பு ஆசிரியை!! நான் அவர்களிடம் படித்தபோது அவருக்கு வயது இருபதுகளின் தொடக்கத்தில்தான் இருந்திருக்கும்.... ஓர் இருபது வயது இளம்பெண், ஆறேழு வயது சிறுவர்களுக்கு வகுப்பாசிரியையாக இருந்து நாளும் கட்டிமேய்ப்பது எவ்வளவு சவாலான காரியம் என்பதை நான் இருபதுகளில் நுழைந்தபின்தான் வணக்கத்துடன் உணர்ந்தேன்..... அதுவும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் போல ப்ரைமரி ஸ்கூல்களிலேயே ஒவ்வொரு பாடத்துக்கும் ஓர் ஆசிரியை என்று கிடையாது... காலை முதல் மாலை வரை ஒரே ஆசிரியர்தான் எல்லா பாடவேளைகளுக்கும்....!!
 இறக்கைகள் இல்லாத ஒரு தேவதையாகத்தான் அவரை நினைவுகூற முடிகிறது என்னால்.... கண்களில் அன்பைத் தேக்கிவைத்திருக்கும் நிர்மலா டீச்சரின் முகம் இன்றும் என் நினைவுகளில் பசுமையாக இருக்கிறது.... ஒரு குறுகிய கட்டத்துக்குள் அவரின் பங்களிப்பை என்னால் இங்கு எழுதிவிடமுடியாது.... அதிர்ந்துகூட பேசாத மென்மையான குணம்கொண்டவர் என்னுடைய டீச்சர், இருப்பினும் கையில் ஒரு ஸ்கேலை வைத்துக்கொண்டு ஸ்ட்ரிக்டாக மிரட்டுவார்....அதையெல்லாம் அப்போது நினைவில் தேக்கிவைத்துக்கொண்டு இப்போது நினைத்துப் பார்க்கிறேன்...... இப்போ எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை..... என் அன்பு ஆசிரியைக்கு என்றுமே என் டாப் 10ல் நீங்காத இடமுண்டு :)

ஸ்டெஃபி கிராஃப்:

நான் ஸ்டெஃபியின் ரசிகன்... 1987 விம்பிள்டன் ஃபைனல்ஸ் நடந்துகொண்டிருந்தது.... எனக்கு மூன்றுவயது.... அக்ரெஸிவாக எதிர்த்து ஆடும் "டென்னிஸ் ரவுடி" மார்ட்டினா நவரத்திலோவாவைப் பிடிக்கவில்லை எனக்கு.... "அவ ஆம்பள மாதிரி இருக்கா..." என்று மனது சொன்னது....!! மறுபுறம் ஒரு சின்னப் பெண்ணாக, மென்மையாக துள்ளித்துள்ளி ஆடிச் சோர்ந்து தோற்றுப் போன ஸ்டெஃபி தோல்வி தாங்காது அழுதாள்.... அம்மா மடியில் தலைவைத்து டென்னிஸ் பார்த்துக் கொண்டிருந்த நானும் 'ஓ' வென்று அழுதுவிட்டேன்!!! :))))
அடுத்த ஆண்டிலிருந்து ஸ்டெஃபியின் ரசிகர்களுக்கு பொற்காலமாய் இருந்தது.... வெற்றிமேல் வெற்றிபெற்று வரலாறு படைத்தார் என் பாசத்துக்குரிய ஜெரிமனி அக்கா!! ஹாஹாஹா.....
மற்ற வீராங்கனைகளைவிட ஸ்டெஃபியிடம் என்னைக் கவர்ந்தது ஸ்டெஃபியின் மாறாத பெண்மைதான்!!! எதிர்முனையில் உடல் இறுகி, ஆஜானபாகுவாய் மிரட்டும் முரட்டுப் பெண்கள், மெல்லினங்களின் இடத்திலெல்லாம் வல்லினங்களால் நிரம்பிய‌ எழுத்துப்பிழைகளாய் எழுந்து நிற்க.... மெல்லினக் கவிதையாய், குதிரைவால் காற்றில் குதிக்க நளிணமாக விளையாடி வெற்றிபெறும் ஸ்டெஃபி கிராஃபை இன்னும் மறக்கவில்லை :)

இந்திராகாந்தி:

நான் பிறந்து மூன்றே மாதத்தில் கொன்றுவிட்டார்கள் இந்த இரும்புப் பெண்ணை....
இவரைப் பார்த்தறியவில்லை, கேட்டும் படித்தும்தான் அறிந்திருக்கிறேன்....
நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யாருக்கும் அஞ்சாத தன்மையும்தான் "ஆண்மை" என்றுசொன்னால்.... இதுவரை இந்தியாவை ஆண்ட ஒரே "ஆண்" இந்திரா காந்தி அவர்கள் என்றுதான் சொல்வேன்....!!
"விளைவுகளை எண்ணி பயப்படாததுதான் சுத்தமான வீரம்" என்பதையும் இவர்களைப் படித்துதான் கற்றுக்கொண்டேன்.... அரசியல் அபிமானம் கடந்துதான் வியக்கிறேன் இந்த அயர்ன் லேடியை :)

அன்னை தெரஸா:

என்னது அன்னையின் பெயரில்லாமல் பிடித்த பெண்களின் பட்டியலா??
பெண்மையின் தனிச்சிறப்பு தாய்மை.. அந்த தாய்மையே பெண்மையை முற்றிலுமாய் ஆட்கொண்ட அதிசிய படைப்பு இந்த அன்னை!! என்னவென்று சொல்வது இந்தக் கிழவியை!! வாழ்த்தவா??? வணங்கக்கூடத் தகுதி வேண்டும்... வேண்டுமானால் வழிபடலாம் இந்த தெய்வத்தை...

"மனதில் உறுதி வேண்டும்" நந்தினி(!) :

இவள் ஒரு கற்பனைப் பெண்!! "மனதில் உறுதிவேண்டும்" படத்தில் சுகாசினியின் பாத்திரத்தைத் தான் சொல்கிறேன்!!
செவிலிகள் வணக்கத்துக்குரியவர்கள்... இந்தப் பாத்திரப் படைப்பு என்னைச் சின்ன வயதிலேயே பாதித்தது.....
ஒரு தொழிலின் மேன்மை முதன்முதலில் எனக்குப் பிடிபட்டது இந்தப் படத்தின் க்ளைமேக்ஸில் நந்தினி பேசும் வசனத்தில்தான்.... குடும்ப பாரத்தைப் போராடித் தாங்கும் பெண்கள், தினசரி போராட்டங்களில் ஈடுகொடுத்து முன்னேறும் பெண்கள், எத்தனையோ இன்னல்களுக்கு இடையிலும் தொழில் வாழ்வில் இன்முகம் காட்டும் பெண்கள் என அன்றாட வாழ்வில் காணும் எண்ணற்ற "கிரேட்" பெண்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாய் எனக்கு நந்தினியை ரொம்பப் பிடிக்கும்!!

டாக்டர் ஷாலிணி:

மதுரைப் பதிவர்கள் ஏற்பாடுசெய்த "குழந்தைகள் மனநலம்: கருத்தரங்க"த்தில் கலந்துகொண்டதிலிருந்தே டாக்டர் ஷாலிணியின் மீது அளவற்றதொரு மரியாதை ஏற்பட்டது... ரொம்ப நல்லா பேசினாங்க‌... அதுபற்றிதான் ஏற்கெனவே எழுதிவிட்டேனே!! அதன்பின் "பெண்ணின் மறுபக்கம்" உள்ளிட்ட இவர் எழுதிய புத்தகங்களைப் படிக்கத் துவங்கினேன்....
'பெண்ணியப்' போர்வைகளால் தன்னைப் பொதிந்து கொள்ளாமல், "மனிதப் பெண்"ணின் போராட்டங்களை இயற்கை மற்றும் பரிணாமக் கூறுகளால் அணுகி ரொம்பவே யதார்த்தமாகத் தோழமையுடன் எடுத்துச் சொல்லும் பாங்கிற்கு சல்யூட்!

(அய்யோ இன்னும் நாலு இருக்கா!! வெரி ஸாரி எனக்கு சுருக்கமா எழுத்து வரல!!)

கிரண்பேடி:

இவரைப் பற்றி நான் சொல்லத் தனியாக எதுவும் இல்லை... நீங்கள் படித்தறிந்து வியந்து போற்றிய அதே கட்டுரைகளைப் படித்து என்னுடைய டாப் டென்னிலும் நீங்காத இடம் கொடுத்து வைத்திருப்பவன்தான் நானும்!!
வாழ்வற்ற கல்லறைத் தடமான, அதுவும் ஆசியாவிலேயே பெரிய சிறைச்சாலையான திகார் ஜெயிலின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகப் பதவியேற்று ஆறே மாதத்தில் அந்த அவலபூமியை ஒரு பயிலரங்கம்போல் மாற்றிக் காட்டி, அதற்காகவே பிரத்யேகமாய் ராமன் மகஸேஸே விருதுவாங்கினார் கிரண்பேடி... ஓர் அதிரடி வீரமங்கை என்றபோதிலும் மங்காத தாயுள்ளம் இருந்ததால்தான் இந்த சாதனை சாத்தியமானது... ஓர் ஆண் அதிகாரிக்கு இது அவ்வளவு எளிதில் தோன்றாது என்பது என் தாழ்மையான கருத்து.....

மேதா பட்கர்:

இந்த அம்மா பற்றி என் நண்பன் கார்த்திகேயன் சொல்லி அறிந்தேன்...
அதன்பின் இவரைப் பற்றிப் படித்து வியந்தேன்.... ஓர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரின் மகள்.. சுதந்திர இந்தியாவில் இன்னும் சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார் சுதந்திரமாக..... நர்மதா நதி என்று கூகுளில் தேடினால் முதல் லிங்கில் இருந்தே மெதா பட்கரின் பெயர் கூறும்!! அந்த ஆற்றுப் படுகை மக்களுக்கு சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு தந்து, இன்னும்கூட போராடிவரும் மேதாபட்கர் தன்னலமற்ற ஒரு அறிவார்ந்த போராளி....

பி.சுசீலா

பெண்குரல் இனிமையானது என்பது தெரியும்... எவ்வளவு இனிமையானது என்று கேட்டால் பி.சுசிலாவின் குரலைத்தான் சொல்வேன்!! குழலோசையினும் மெல்லிதானது இந்தக் குயிலோசை!!
இவரின் குரலையும் தாண்டி, இந்தத் தலைமுறையின் இசை நிகழ்ச்சிகளிலும், பாராட்டு விழாக்களிலும் ஒரு தாய் போல இவர் காட்டும் ஏற்புடன் கூடிய‌ Gesture நெகிழவைக்கும்!!..... எனக்கு இவங்களை ரொம்பப் பிடிக்கும்... சின்ன வயசுல இவங்க பாட்டைப் பாடிதான் எங்க அம்மா என்னைத் தூங்கவைப்பாங்க.......

மேடம் க்யூரி:

"ரேடியம் கண்டுபிடித்தவர் மேடம் க்யூரி" என்பதைத் தவிர எனக்கு அவரைப் பற்றி வேறெதுவுமே ஆழமாகத் தெரியாது....
இயற்பியல், வேதியல் என ஒன்றுக்கு மேற்பட்ட அறிவியல்களில் நோபல் பரிசு பெற்ற ஒரே ஒருவர் இதுவரை உலகில் இவர்தான்...!!
இவர் வாழ்க்கையைக் கற்பனை செய்துபார்த்தேன் எனது டாப் டென்னில் வந்துவிட்டார்!!
கணவனும் மனைவியும் ஓர் ஆய்வுக்கூடத்தைப் பகிர்ந்துகொண்டு, ஒரே இலக்கை நோக்கித் திட்டமிட்டு உழைத்து... பாதியில் கணவன் ஒரு விபத்தில் திடீரென‌ மறைய, மனைவி தொடர்ந்து முயன்று ஆய்வில் வென்று உயரிய விருதாம் நோபல் பரிசு வெல்கிறாள்.... என்ன ஒரு ஒன்லைன் இவரின் வாழ்க்கைக் கதைக்கு... மேற்கொண்டு விரிவாக எனக்கு எதுவும் தெரியாது இவரைப் பற்றி..... இருப்பினும் அகமும் புறமுமாகிவிட்ட அந்த‌ ஆய்வுக்கூடத்தில் ஒரு மேசையில் கண்ணத்தில் கைவைத்து சோகமாய் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணாக என் மனதில் எப்படியோ பதிந்துவிட்ட மேரி க்யூரியை எனக்குப் பிடிக்கும் :)


நான் தொடர அழைப்பது....

ஜெர்ரி மாமா
ஸ்ரீ
கார்த்திகைப் பாண்டியன்
சின்ன அம்மிணி அக்கா
வெற்றி
கண்ணா
காவ்யா

இவர்களை ஏற்கெனவே யாரும் அழைத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை!!
தேன் அக்காவுக்கு நன்றிகளுடன்,

18 comments:

thenammailakshmanan said...

1 எல்லோருக்கும் டீச்சர் இறக்கைமுளைக்காத தேவதைதான்
2. அட இந்தப் பய புள்ள எந்த வயசிலேயே இதெல்லாம் பார்த்து இருக்கு பாரு
3.ஓகே அயர்ன் லேடி
4. அன்பு தெய்வம்
5.பெண்களுக்கு மரியாதை
6. பிரபு உங்களுக்கும் நல்ல மனம்
7. ஆமாம் உண்மை அவல பூமியை மாற்றியது வெல் செட் பிரபு
8. உண்மையான சமூக நலம்
9.என்னைத்தாலாட்ட வருவாளா
10. கணவன் பாதி மனைவி பாதி சோ நோ சோகம் பிரபு

ஆமா கொடுத்த அஸன்மெண்டை கலக்கலா பண்ணிட்ட.. நூத்துக்கு நூறு.. ஆமா இன்னைக்கு ஆபீஸுக்கு லீவா பிரபு..?

Chitra said...

அருமையான பகிர்வு. Nirmala teacher and Nandhini - Making a difference ....... :-)

வெற்றி said...

நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு வருது பாரு தொடர்பதிவு :)

வெற்றி said...

எழுதுகிறேன் நண்பா..இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத மத்தியில்..ஏற்கனவே 'பதின்மம்' நிலுவையில் உள்ளது..ஆனால் நான் எழுதுவதற்குள் இந்த தொடர்பதிவுகள் அவுட்டேட்டட் ஆகி விடும் என நினைக்கிறேன்..

கண்ணா.. said...

நல்ல விவரிப்புடன் சொல்லி விட்டீர்கள்.

நிறைய பேருக்கு டீச்சர்தான் பிடித்த 10 பெண்களில் வருகிறார்கள். எவ்வளவு உன்னதமான பணி அது இல்லையா.??

அழைப்பிற்கு நன்றி. விரைவில் எழுதுகிறேன்

:)

ஜெரி ஈசானந்தன். said...

படித்தேன்,ரசித்தேன்,பொதுவாய் தொடர்பதிவு பிடிப்பதில்லை,ஆனாலும் உன் மிரட்டலுக்கு பணிந்து எழுதுகிறேன்

பிரபு . எம் said...

பாஸ்மார்க்குக்கு பரிட்சை எழுதி நூறு மார்க் வாங்கிட்டேனா!!
நன்றி அக்கா.. :)
இன்னொருமுறை மனமார்ந்த நன்றி என்னை அழைத்தமைக்கு :)

ரொம்ப நன்றி சித்ரா அக்கா... உங்க பதிவு ரொம்ப ரொம்ப வித்தியாசமா இருந்திச்சு.. வெரி நைஸ்...

நன்றி நண்பா... அவசரம் இல்லவே இல்லை... மெதுவா எழுதுங்க... வெற்றிக்காகக் காத்திருக்க மாட்டோமா!! :)

ஆம் கண்ணா ஆசிர்யப்பணியை விட உன்னதமானது வேறென்ன இருக்கப் போகிறது?அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி நண்பா :)

என்னுடைய அழைப்பை அன்புடன் ஏற்றுக்கொண்ட அன்பு ஜெரி மாமாவுக்கு நன்றிகள் பல..... :)

அக்பர் said...

உங்கள் தேர்வு அருமை பாஸ்.

சின்ன அம்மிணி said...

பிரபு, எழுத முயற்சி பண்றேன். எழுதாட்டி கோவிச்சுக்காதீங்க :)

பிரபு . எம் said...

அழைப்பை ஏற்றுக்கொண்டதே மிகப்பெரிய மகிழ்ச்சி அக்கா...
நேரம் அனுமதித்தால் எழுதுங்க... :)

பிரபு . எம் said...

நன்றி அக்பர்...
உங்களுடைய தேர்வைவிடவா :)
ரொம்ப நல்லா எழுதியிருந்தீங்க அக்பர்....

ஸ்ரீ said...

எழுதிடுவோம்.

இராமசாமி கண்ணண் said...

நல்ல தேர்வுகள்.

நேசமித்ரன் said...

நினைவும் புனைவும் வரிசை படுத்தி இருக்கும் பெண்கள் அழகு வாழ்த்துகள் . உங்களுக்கும் நன்றி சொல்லி இருக்கிறேன் என் பதிவில்

பிரபு . எம் said...

//எழுதிடுவோம்//
அழைப்பை ஏற்றமைக்கு மனமார்ந்த நன்றிகள்.....
ஆர்வமுடன் காத்திருக்கிறேன் உங்களின் ஃப்ளேவருக்காக :)

//நல்ல தேர்வுகள்//

மிக்க நன்றி.. தங்களின் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி :)

பிரபு . எம் said...

//நினைவும் புனைவும் வரிசை படுத்தி இருக்கும் பெண்கள் அழகு வாழ்த்துகள் . உங்களுக்கும் நன்றி சொல்லி இருக்கிறேன் என் பதிவில்//

நேற்றிலிருந்து மூன்றுமுறைக்கும்மேல் வாசித்துவிட்டேன்... :)
வீட்டில் எல்லாருக்கும் வாசித்துக் காட்டியும் நட்பை சிலாகித்துக் கொண்டிருக்கிறேன்...
பின்னூட்டம் எழுதத் தாமதித்துவிட்டேன்..... extremely sorry :)

கண்ணா.. said...

தொடர்பதிவை போட்டாச்சி நண்பா...

கண்ணா: பத்து பெண்களாஆஆஆஆ......!!!!! தொடர்பதிவு...

Sathiyameyjeyam said...

ஹாய் பிரபு, அடுத்து பிடித்த 10 ஆண்கள் தொடர்பதிவு எப்போ? தயவு செய்து அதில் என்னைப் பற்றி குறிப்பிட்டு பெரிதுபடுத்த வேண்டாம்.

Post a Comment