skip to main |
skip to sidebar
இதுபோன்ற விஷயங்களையெல்லாம் எழுதுவதா?? படிப்பது கூட தேவையற்ற காலவிரயம்தான்.....
எங்கே விடுகிறார்கள்.... "உடனடியாக சன் நியூஸ் பார்க்கவும்" என்று குறுஞ்செய்தி வந்தது...
இதற்கு முன்பு எனக்கு இப்படிக் குறுஞ்செய்தி வந்தது கலைஞர் கைதுண்ட போதும், செப்டம்பர் 11 ட்வின் டவர் இடிபட்டபோதும் தான்.... ஏதோ நடக்கிறதோ என்று டிவியை ஆன் செய்தேன்..... அந்த கண்றாவிதான் அரங்கேறிக் கொண்டிருந்தது....
குறுஞ்செய்தி அனுப்பியவனுக்கு வேறு யாரோ சன் நியூஸ் பார்க்குமாறு செய்தி அனுப்ப, என்னவென்றே பாக்காமல் நண்பர்கள் அனைவருக்கும் ஃபார்வோடு செய்திருக்கிறான் இந்த சமூக சேவகன்... அவனைச் சொல்வதா அல்லது நாளொன்றுக்கு நூறு எஸ் எம் எஸ் இலவசமாகத் தரும் அலைபேசி சேவையைச் சொல்வதா??
ஓர் அந்தரங்க வீடியோ பதிவெடுக்கப் பட்டுள்ளது.. அது எதற்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கு அனுப்பப் பட வேண்டும்... காவல்துறையின் விலாசங்கள் மக்களுக்குத் தெரிவதில்லையா??( காவிகளுக்கு இருக்கும் நம்பகத்தன்மை கூட காக்கிகளுக்கு இல்லாமல் போனதுதான் அவலங்களின் ஆரம்பமோ??) அந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது... இன்னுமோர் ஆன்மிக வியாபாரியின் முகத்திரை கிழிந்துபோனது...... ஆராதித்த ஏமாளிக் கூட்டமே இன்று அவன் ஆசிரமத்தை அடித்து நொறுக்கியுள்ளது.... சரி... அவன் மேல் இதுவரை ஒரு வழக்கு பதிவாகி உள்ளதா? யார் வழக்கு பதிவு செய்வது? எந்த குற்றத்தின் அடிப்படையில்?? ஆக இரண்டு நாட்களாக, ஏதேதோ நடந்துகொண்டிருக்கிறது மீடியாவில், சட்டம் என்றும் நீதித்துறை என்றும் காவல்துறை என்றும் இருக்கிறவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?? மீடியாவுக்கும் மக்களுக்கும் இடையே சட்டத்திற்கு இடம் என்றுதான் ஏதேனும் இருக்கிறதா??
அவன், அவனது துறவற நெறிகளை மீறியிருக்கிறான்....சரி.. கூடவே மாட்டிக்கொண்டுள்ள அவனைவிடப் பிரபலமான அவள்???? அவன் அடுத்த சிலகாலம் கழித்து சில வெள்ளைத்தோல் பக்தசிகாமணிகளுடன் அமெரிக்காவில் ஆசிரமம் ஆரம்பிப்பான்..... மீண்டும் இவள்????
"கதவைத் திற காற்று வரட்டும்" என்று ஆன்மிகத் தொடர் எழுதவிட்டு அவனை ஆராதித்த குமுதம் ஆளுக்கு முந்தி "சாமியாரின் முகத்திரை கிழிக்கும் எக்ஸ்க்ளூஸிவ் வீடியோ" என்று இமெயில் அனுப்புகிறது... இத்தனை நாள் அவன் எழுத்தைப் பதிவுசெய்து அவனுக்குப் பெரும் அந்தஸ்து கொடுத்ததற்கு அவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?? யார் கொடுப்பது??
இந்த வெட்கங்கெட்ட சம்பவங்கள் நமக்குப் புதிதல்லவே அல்ல.... ஆனால் சமீபகாலமாகவே மீடியாவின் அத்துமீறல்கள் அடக்குமுறையின்றித் தொடர்ந்துகொண்டே இருக்குமானால் தணிக்கைக் குழு, நீதித்துறை இவையெல்லாம் எதற்கு இருக்கவேண்டும்?? இழுத்து மூடிவிடலாமே..... எதை ஒளிபரப்புவது.. எதை விடுப்பது என்று எந்த வரையரையுமே கிடையாதா நம் நாட்டில்??... புரியவில்லை...நாளைக்கு ஒரு கொலையையும் கற்பழிப்பையும்கூட வீடியோ கொடுத்தால் ஒளிபரப்புவார்களா??
இந்த ஒரு ஸ்காண்டல் எத்தனை முக்கியச் செய்திகளை கவனங்களிலிருந்து இருட்டடிப்பு செய்திருக்கிறது என்பதை ஒருமுறை யோசித்துப் பார்க்கவும்....
வீரப்பன் செத்துப்போனதோடு " நக்கீரன்" தன் நெற்றிக்கண்களைக் கதவுகளின் சாவித்துவாரங்களில்தான் விடாது பொருத்திவைத்திருக்கிறான் கல்லா கட்டுவதற்காக....
ஜுவி, ரிப்போர்ட்டர்களைத் தொட்டு நாளாகிவிட்டது, விகட குமுதங்களின் மீதும் மரியாதை போய்விட்டது... வேறெந்தவொரு வெகுஜன பத்திரிக்கையையும் தொடவே விருப்பமற்றுப் போய்... மேலும் சினிமா.. டிவி எல்லாம் வெறுத்துப்போய்.... அடப்பாவிகளா... கடைசியில் நம்மள துறவி (உண்மையான துறவின்னு தான் அர்த்தம்... மாத்திப் புரிஞ்சிக்கப் போறீங்க!!) யாக்கிடுவானுங்க போலயே....
எங்கே செல்லும் இந்தப் பாதை.......
எனக்கு சமூகத்தில் விடை தெரியாத கேள்விகளைதான் இங்கே கேட்டிருக்கிறேன்.... வேறெங்கு கேட்பது நான், என் வலைப்பூவை விட்டால்?? இருப்பினும் சுத்தம் சுகாதாரம் கருதி..... இதை நானே அழித்துவிடுவேன் விரைவில்.....
13 comments:
nice post
//காவல்துறையின் விலாசங்கள் மக்களுக்குத் தெரிவதில்லையா??//
அங்க போயிருந்தா உண்மை வெளியே வந்திருக்காது தல..ஒரு ஒலக மகா பிட்டு வெளிவராமலே போயிருக்கும் :)
//வீரப்பன் செத்துப்போனதோடு " நக்கீரன்" தன் நெற்றிக்கண்களைக் கதவுகளின் சாவித்துவாரங்களில்தான் விடாது பொருத்திவைத்திருக்கிறான் கல்லா கட்டுவதற்காக....
அறிவார்ந்த சொல்லாடல். ரசித்தேன் மாப்பு.
/இருப்பினும் சுத்தம் சுகாதாரம் கருதி..... இதை நானே அழித்துவிடுவேன் விரைவில்....//
வேண்டாம்.இருக்கட்டும்.நல்லாத்தானே இருக்கு.
பிரபு!இங்கே எல்லாமே வியாபாரந்தான்.
இருப்பினும் சுத்தம் சுகாதாரம் கருதி..... இதை நானே அழித்துவிடுவேன் விரைவில்.....
.........மக்களும் அதை நினைவலைகளில் இருந்து அழித்து விடுவார்கள்.....
அவர்களின் மதுரை தினகரன் அலுவலகத்தில், இறந்து போன மூன்று அப்பாவிகளை இவர்கள் என்றேனும் நினைத்ததுண்டா.
நல்லவேளை நான் இப்ப இங்க இருக்கேன். இல்லாட்டி வீட்டுல அண்ணன் அக்காவோட சன் டீவி புண்ணியத்தில பாத்துருப்பேன். சன் டீ விக்கு ஒரு நல்ல வியாபாரம்.
நன்றி மாமா.... சரிங்க மாமா அழிக்கவில்லை.. :-)
நன்றி ராம்ஜி....
//உலக மகா பிட்டு// ஹாஹா... அதுவும் சரிதான் வெற்றி....:-))
உண்மைதான் ஸ்ரீ அண்ணா.. எல்லாம் வியாபாரம்தான்... ஏதோ..பதிவுலகம் இருப்பதனால்தானே எழுதவாவது முடிகிறது :-)
ஹாய் சித்ரா அக்கா... உங்க "கதவைத்திற" திரைவிமர்சனம் சூப்பர்ப்... இந்நேரம் ஐபிஎல் ஆரம்பித்திருந்தால் இப்போதே மறந்திருப்போம்!!
நன்றி தமிழ் உதயம்.... சட்டமே வசதியாக மறந்துகொண்டதே அந்த நிகழ்வை....
மறந்து கூட சன் டிவி சப்ஸ்கிரிப்ஷன் எல்லாம் வாங்கிடாதீங்க அக்கா.... :-)
சரியான சாடல் பிரபு
அருமை
அழிக்க வேண்டாம்
நன்றிங்க... நீங்களும் ஜெர்ரி மாமாவும் சொன்ன பிறகு அழிப்பேனா :)
எல்லாத்துக்கும் பணம் தான் காரணம்!
எல்லாம் தெரிஞ்சும் Mr.பொதுஜனம் ஏமாந்துகிட்டே தான் இருப்பான்.
பிரபு உங்களை ஒரு தொடர் இடுகை எழுத அழைத்து இருக்கேன் வந்து என்னோட பதிவைப்பாருங்க
Post a Comment