சமீபத்தில் என் தாய்வழி உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி பேசி மகிழ்ந்த ஒரு நன்னாளில் நாங்கள் எல்லாரும் சிரித்து மகிழ்ந்த ஒரு விஷயத்தைப் பதிவுலகில் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்..... :)
தமிழர்கள் திரைகடல் ஓடித் திரவியம் தேடுவதால் தமிழ் படும் பாட்டைப் பற்றியது இந்த இடுகை...!!
என் அம்மாவுக்கு உடன்பிறந்த மூன்று தங்கைகளில் (என் அன்பு சித்திகள்) ஒரு சித்தி, எனக்கு இரண்டு வயது இருக்கும்போதே திருமணமாகி நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்துவிட்டார், என்னை ஏரோப்ளேன் பார்த்து ஏங்கவைத்துவிட்டு!! ..... அது ஆகிவிட்டது இருபத்துமூன்று வருடங்கள்.... :) சமீபத்தில் சித்தி தன் குடும்பத்துடன் தாய்வீடு வர ஏகக்குஷியில் எக்கச்சக்க அரட்டைக் கச்சேரிகள் அடித்து மகிழ்நதோம்.....
சரி...விஷயத்துக்கு வருகிறேன்....
என் சித்தி பிள்ளைகளில் மூத்தவளுக்கு மட்டுமே தமிழ் சிறப்பாகத் தெரியும்..... மற்ற மூவருக்கும் கொன்ச்சம் கொன்ச்சம் தான் டாமில் டெரியும்!! :(
தமிழ் தெரிந்த என் தங்கை, சித்திக்கு சமையலறையில் உதவும்போது இருவரும் "தமிழ்"க் கதைப்பது வழக்கமாம்.... அன்றைக்கு ஒருநாள் ஏதோவொரு சாண்ட்விட்ச்சை செய்துகொண்டே, " இளைய நிலா பொழிகிறதே.." பாடல் பற்றிப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்....கவிஞர் வைரமுத்துவின் எவர்கிரீன் வரிகளல்லவா அவை.... என் சித்தியும் வைரமுத்துவின் ரசிகையாதலால் அவர் ரசித்த வைர வரிகளையெல்லாம் சிலாகித்துக் கொண்டிருந்திருக்கிறார்.... "டாமில் கொன்ச்சமாகத் தெரிந்த" இரண்டாமவள் கவிதைகளின் அர்த்தம் புரியாமல் அங்கு இந்த இரண்டு தமிழ் ரொட்டிகளின் நடுவே சிக்கி சாண்ட்விட்சாகி நைய்ந்திருக்கிறாள் நெடுநேரமாக!! இவர்களோ அவள் கஷ்டம் புரியாமல் கவியரங்கம் நடத்திக்கொண்டிருந்திருக்கிறார்கள்....
போதாதற்கு ...... "வைரமுத்துவின் கவிதைகளை உனக்கு ரசிக்கக் கொடுத்துவைக்கவில்லை அவர் சிறந்த கவிஞர்..." என்கிற ரீதியில் மூத்தவள் தன் தங்கையை வெறுப்பேற்றியிருக்கிறாள்....
அதற்கு அவளோ வெறுப்பில்.... " உங்க வைரமுத்து சிறந்த கவிஞராக இருக்கலாம் ஆனால் அவர் பெயரைப் பாருங்கள்... தி மோஸ்ட் ஃபன்னியஸ்ட் நேம் ஆன் எர்த்.... ஹி ஹி ஹி...." (The most funniest name on earth)என்று சொல்லிவிட்டு நகர்ந்திருக்கிறாள்...!!!
"அவரு பேருக்கென்ன....அழகுபெத்த பேரு.... வைரம் + முத்து.... இதுல என்ன ஃபன் இருக்கு????"
ரொம்பவெல்லாம் யோசித்து பன் ஆகவேண்டாம்.... இதற்கு என் "டாமில்" தங்கை கொடுத்த விளக்கம்....
"அவரு பேரு என்ன .... "வயிரமுத்து"... வயிரை எதுக்கு முத்தணும்??... வொய் டூ கிஸ் தி டம்மி??!! ஹி ஹி.... ஃபன்னி நேம்!!"
ஆகவே நல்லா கேட்டுக்குங்க வலைத்தமிழ் மக்களே...... வைரமுத்துவின் "டாமில்" அர்த்தம் கிஸ் தி டம்மி யாம்!!! :)))
வைரமுத்துவின் கவிதையை ரசிக்கும் நேரத்தில் இந்த செந்தமிழ்த் தேன்மொழியாளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்திருக்கலாம் என் சித்தி :)))))
பிள்ளைங்களுக்குத் தமிழ் சொல்லிக்குடுங்கப்பா!!!
அன்புடன்,
21 comments:
//வயிரை எதுக்கு முத்தணும்??//
hahahaa
நீதி நல்லாவேயிருக்கு
//வைரமுத்துவின் கவிதையை ரசிக்கும் நேரத்தில் இந்த செந்தமிழ்த் தேன்மொழியாளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்திருக்கலாம் என் சித்தி :)))))//
நியாயமான ஆதங்கம்தான்....
:)))))
தமிழிஷ்ல இணைச்சா மட்டும் பத்தாது..அதோட ஒட்டுப்பட்டைய உங்கள் பதிவில் இணையுங்கள் நண்பா..அப்போதுதான் ஓட்டு போட வசதியாக இருக்கும்..
நல்ல கருத்து...
ஹஹஹஹா செம கண்டுபிடிப்பு .
ஹாய் வெற்றி... நண்பா தமிழிஷ் கருவிப்பட்டையும் இணைச்சுட்டேன்...
ஆகவே இனிமேல் உங்கள் பொன்னான வாக்குகளை தமிழிஷில் குத்தும்படி கேட்டுக் கொள்கிறேன் :)
நன்றி நண்பா.. :)
Nice to hear from you akka :)
Thank you so much for your continous encouragement...
ரொம்ப நன்றி கண்ணா, அசோக்..
வணக்கம் அண்ணாமலையான்... தங்கள் அறிமுகம் கிடைத்தது மகிழ்ச்சி...
கருத்துரைக்கு ரொம்ப நன்றி :)
//ஹஹஹஹா செம கண்டுபிடிப்பு //
Thank you friend :-)))
நல்ல காமெடி பிரபு நல்ல தங்கை நீங்களே டமில் சொல்லிக் கொடுங்கப்பா
நான் சொல்லிக்குடுக்கவா!!
இப்டியெல்லாம் சொன்னீங்கன்னா... உங்க கவிதைகளை என் தங்கையை விட்டு சத்தமா வாசிக்கச் சொல்லிடுவேன் ஜாக்கிரதை!! :-)))))
"ஒற்றைப் பூ" கவிதை ரொம்ப அழகா வந்திருக்கு.... :)
உங்க நட்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி...
பிள்ளைங்களுக்குத் தமிழ் சொல்லிக்குடுங்கப்பா!!!
...... - மம்மி டாடியை, அம்மா அப்பா என்று மாற்றுவது முதல் பாடம்.
. ....... நல்லா இருக்குங்க உங்க இடுகையும் அதன் கருத்தும்.
வோட்டு போட்டாச்சு.
வணக்கம் சித்ரா அக்கா...
ரொம்ப நன்றி :)
கரெக்ட்.... மம்மி டாடி கலாச்சாரம் கிராமங்கள்வரை ஊடுறுவியிறுக்கு....
இங்க்லீஷ் மீடியத்தில் குழந்தைகளை சேர்த்துவிட்டவுடனேயே பெற்றோர்கள் பிள்ளைகளிடம் எதிர்பார்க்கும் முதல்பாடமும் இதே மம்மி டாடி தான்!! :)
நன்றி அக்கா:)
:)
நல்லாருக்கு...டமில்
hahahaa....
நன்றி நண்பா :)
That was on dot... very nice way to put it across... Appreciate your effort... I enjoyed it... :)
:-)
மிக மிக ரசித்தேன் பிரபு - அயலகங்களில் வாழும் நம் மழலைச் செல்வங்களின் மழலைத் தமிழ் இப்படித்தான். என்ன செய்வது - வீட்டில் கூட தமிழ் பேச இயலாத நிலை. மாற வேண்டும் - மாறும் - மாற்றுவோம்.
எங்கள் பேத்திக்கு "குரு பிரம்மா" சொல்லிக் கொடுத்து விட்டு சொல்லச் சொன்னால் - அழகாக மழலையில் சொல்லி விட்டு ஆமென் என்றும் கூறி ஓடி விடுகிறாள். ம்ம்ம்ம்ம்
நல்வாழ்த்துகள் பிரபு
நட்புடன் சீனா
கிஸ் த டம்மி - சூப்பரப்பு - பாவம் வயிரமுத்து
நல்வாழ்த்துகல் பிரபு
நட்புடன் சீனா
Post a Comment