ஃபெவிகால் விளம்பரங்கள்...
பள்ளிக்கூட நாடகம் ஒன்றில் குட்டிமீசை ஒன்றை ஒட்டிக்கொண்டு வாள்வீசும் சிறுமி... அதே மீசையோடே படித்து... மீசைக்காரியாய் வாழ்க்கைப்பட்டு... அதே மீசையுடன் தலைசீவி..கிழவியாகி செத்துப்போய்... மீண்டும் அதே மருத்துவமனையில் அதே ஒட்டுமீசையுடன் பிறக்கும் (!)
 ஃபெவிகாலின் விளம்பரப் படத்தை ரசித்தீர்களா!! :))இதுமட்டுமல்ல... ஃபெவிகாலின் விளம்பரங்கள் எல்லாமே சுவாரஸ்யமானவைதான்!!

கோழிமுட்டைகளை வரிசையாக உடைத்து உடைத்து சட்டியில் ஊற்றிக்கொண்டிருப்பார் ஒரு பெரியவர்... ஒரு முட்டை மட்டும் ஓங்கியடுத்தும் உடையாது சுத்தியால் அடித்தும் தப்பித்து ஓடும் முட்டை இடித்து குடத்தில் ஓட்டை விழுந்து நீர் ஒழுகும் (என்னா வில்லத்தனம்!!)..... அதிசியத்தில் அண்ணார்ந்து பார்த்தால் ஒரு ஃபெவிகால் டப்பாவின் மேல் தீணியைக்க் கொறித்துக் கொண்டிருக்கும் கோழி...!!ஒரு வண்டியில் ஓர் ஊரே ஒட்டிக்கொண்டு பயணிக்கும் பின்னால் பார்த்தால் அது ஃபெவிகால் வண்டி!! இதெல்லாம் உச்சக்கட்ட சேட்டை!!எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த ஃபெவிகால் விளம்பரப்படம் இந்த ராஜஸ்தானி படம்தான்!! ஒருமுறை ஏதோ மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று இது ஒளிபரப்பப்பட் நானும் என் நண்பர்களும் தரையில் உருண்டு சிரித்தோம்!! கடைசியில் 'ஒட்டிக்கொள்ளும்' சிறுவனின் உடல்மொழி.. ஹாஹாஹா...கேத்ரினா கைஃப் தோன்றும் இதுவும் செம்ம சேட்டையான கற்பனை...இன்னும் ஒன்று...இன்னும்கூட எத்தனையோ விளம்பரப்படங்களை எடுத்துத் தள்ளியிருக்கிறார்கள் இதே "ஸ்டிக்கி" தீமிற்காக!!
ஒரே ஒரு தீம் ஐ வைத்துக்கொண்டு எவ்வளவு சிரிக்க வைக்கிறாய்ங்க!! எல்லாமே ஆரோக்யமான கற்பனைகள்!!

ஃபெவிகால் பற்றி யோசித்தபோது... "ஒட்டு" உலகின் ஒரே ராஜா பிடிலைட் நிறுவனத்தின் ஃபெவிகால்தான்....
யாராவது கடையில் சென்று, " ஒரு பாக்கெட் 'அதெஸிவ்' கொடுங்க" என்று எங்காவது இந்தியாவில் கேட்டிருப்பார்களா?? நேரடியாக "ஃபெவிகால்" என்று ப்ராண்ட் நேமைத் தான் கேட்போம்!! அந்தளவுக்குப் பொருளின் பெயரை மறந்து ப்ராண்ட் நேமே, ப்ராடக்ட் நேமாகிப் போயிருக்கிறது!! (இதேபோல் இன்னொரு உதாரணம் "டால்டா" என்று அழைக்கப்படும் வணஸ்பதி!!)


ஒருவேளை.. இந்த சுதந்திரம்தான் ஃபெவிகாலின் விளம்பரங்களைத் தனித்துவமான‌ அழகான கற்பனைகளாக வழங்க வழிவிடுகிறதோ!!


ஏனெனில் நமது விளம்பரங்கள், போட்டி என்கிற பெயரில் அடுததடுத்த ப்ராண்ட்களுடன் தங்களை அப்பட்டமாக கம்பேர் செய்துகொண்டேதான், பாதிக்குமேல் தரமிழந்து போகின்றன!!

எனக்கு அல்சரைக்காட்டிலும் அதிகமாய் வயிற்றெரிச்சலைக் கொட்டுக்கொள்ளும் விளம்பரம் "ஃபேர் அன்டு லவ்லி" விளம்பரம்தான்!! அவர்களின் எல்லா விளம்பரங்களிலும் ஒரு சப்பை ஃபிகர் (மன்னிக்கவும்)  திறமைகளோடு கவனிப்பற்றுக் கிடப்பாள் அவளுடைய மானங்கெட்ட அப்பனோ அல்லது வீணாப்போன தோழியோ ஒரு "ஃபேர் அண்டு லவ்லி" ட்யூபைக் கையில் கொடுக்க, அடுத்த ஏழே நாட்களில் அவள் சூப்பர் ஃபிகராகிவிடுவாள் அவளை எல்லாரும் சைட் அடிக்க அவள் குடும்பமே பூரித்துப் போகும்!!

"சைண்ட் கோபைன்" (Saint-Gobain Glasses) கண்ணாடிகளின் விளம்பரங்களும் கைதட்டி விசிலடிக்கவைத்த‌ ரகங்கள்....

மேலும் பலப்பல அழகான கற்பனைகளால் மின்னும் குட்டிக் குட்டி விளம்பரப் படங்கள் யூ டியூப் எங்கிலும் கொட்டிக் கிடக்கின்றன... பார்த்து ரசிக்கலாம்.... :)

ஐம்பது வருட விற்பனை சாம்பியனாக இருப்பதாகத் தன் லேட்டஸ்ட் விளம்பரத்தில் பெருமையுடன் அறிவிக்கும் பிடிலைட்டின் "ஃபெவிகாலு"க்கு வாழ்த்துக்கள்!!!!


மகிழ்வுடன்,

6 comments:

ஜெரி ஈசானந்தன். said...

அன்பு மாப்ள,இதில் ஒரு சில விளம்பரம் பார்த்திருக்கேன்,நல்ல நகைசுவை, நல்ல எழுத்து நடை,வாழ்த்துகள்.

பிரபு . எம் said...

அடடே.. வாங்க மாமா... முதல்முறையா வந்திருக்கீங்க... வணக்கம் :)
ரொம்ப நன்றி மாமா.... :)

D.R.Ashok said...

எனக்கும் ரொம்ப பிடிக்கும் :)

பிரபு . எம் said...

வணக்கம் அசோக் :)

சின்ன அம்மிணி said...

நல்லா இருக்கு பெவிகால் விளம்பரங்கள். காணொளியும் கொடுத்ததற்கு நன்றி

cheena (சீனா) said...

அன்பின் பிரபு

அருமை அருமை - ஃபெவிகாலின் விளம்பரங்கள் அருமை - வி.வி.சி.

மீசை - கோழி முட்டை - வண்டி - ஓடிய சிறுவன் ஒட்டவைக்கப்பட்ட காட்சி - மனைவி அருகிலிருக்க கனவு - தொங்கிய தம்பதி - அடடா - தேடிப் பிடித்து, கண்டு, ரசித்து, மகிழ்ந்து பகிர்ந்தமைக்கு நன்றி பிரபு.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Post a Comment