தூரம்


நிலாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள் அன்று அலுவலகத்தில்.... ஆளாளுக்கு ஒரு கதை.. ஒன்றிரண்டுபேர் கவிதைகூட சொன்னார்கள்....

திடீரென ஒரு யதார்த்த கேள்வி வந்து விழுந்தது....  

"இவ்ளோ பேசுறோமே... நேற்றிரவு நிலவை நம்மில் எத்தனைப் பேர் பார்த்திருப்போம்.. கடைசியாக நிலவைப் பார்த்த நாளாவது நமக்கு நினைவிருக்குமா?" 

துபாயில் உடன் பணிபுரியும் சக சாஃப்ட்வேர் தமிழ் சகா ஒருவன் கேட்டபோது.... அங்கே முந்தைய நாள் பிறை நிலவைக் கண்டிருந்த ஒரே நபர் அவர்களின் மரியாதைக்குரிய சீனியர் பிரபாகர் மட்டும்தான்!!  

" ஊர்ல இருக்குற என் பொண்ணும் நானும் ஒண்ணா பார்க்க முடிஞ்ச‌ ஒரே நிஜப் பொருள் அதுதானே!!... தினமும் பார்ப்பேன்.. என் பொண்ணும் பார்ப்பா.... நான் ஊரைவிட்டு வரும்போதும் ஊர்ல இருந்து இங்க வரைக்கும் கூட வர்றதும் அதுதானே!! அதுனால தினம் பார்ப்பேன்... ரொம்ப ஓவரா இருக்கோ!!" ஒரு சிரிப்புடன் முடித்தார்....  

கலகலப்பான ஆள்தான் என்றாலும் இரவு நேரங்களில் ரூம்மேட்களிடம்கூட அதிகம் பேசுவதில்லை பிரபாகர்... 
பதினான்காவது மாடியில் இருக்கும் அவர் வீட்டு பால்கனியில் நின்று வானத்தையும், துபாயின் இரவு நேர ஜொலிப்பையும் வெறித்த வண்ணம் சில நிமிடங்கள் கழித்தபின்தான் உறங்கச் செல்வார் தினமும்....  

கேட்டால் அமைதியைக் காதால் கேட்க முடியாது கண்களால்தான் பார்க்க முடியும் என்று சொல்வார்! 

உண்மைதான்.... இரவு நேர கருப்பு வானத்திடம் ஓர் ஆட்கொள்ளும் அமைதி உண்டுதானே.... கண்களால் அந்த அமைதியைத் தொடர்ந்து உள்வாங்க உள்வாங்க பூலோக இரைச்சல்கள் கவனத்தைவிட்டே கரைந்துபோகும்!! அந்த அமைதி ஒரு பொய்தான்... வானத்துப் பேரிரைச்சலைக் கேட்கும் தொலைவில் நாமில்லை என்பதால்தான் இந்த நிசப்தம்....!!

ஆம் தூரம் அமைதி தரும்.... தூரத்தில் இருப்பதால் பிரபாகருக்கு அழகான அவர் குடும்பத்தில் இரைச்சல்கள் எதுவுமில்லை...

தொடரும்....

(பி.கு : சிறுகதை ஒன்றை எழுதத் துவங்கினேன் அது இப்படியெல்லாம் விரிந்து சென்றது... எழுதிய வரை இன்று பதித்துவிட்டுச செல்கிறேன்.. நாளைக்குத்தான் தெரியும் இக்கதையின் தலைஎழுத்து!! சிறுகதையாகப் போகிறதா அல்லது சைஸ் கூடுமா என்று!! Anyways ur comments please....)


5 comments:

சின்ன அம்மிணி said...

ரொம்ப அழகா இருக்கு பிரபு.

பிரபு . எம் said...

Thank you akka.. :)

sridhar sona said...

யதார்த்த உரையாடலோடு இயற்கைசார்ந்த ஒரு வினா, அதில் உறவுசார்ந்த உணர்வோடு ஒரு பதில் பிறகு அதைப்பற்றிய ஒரு தகவல் கடைசியாக

ஆம் தூரம் அமைதி தரும்.... தூரத்தில் இருப்பதால் பிரபாகருக்கு அழகான அவர் குடும்பத்தில் இரைச்சல்கள் எதுவுமில்லை...(இது காமடியான வரிகள் போன்று தோன்றுகிறது என் புரிதல் சரியா பிரபு அண்ணா)
உங்களது எழுத்துநடை நன்றாகஇருக்கிறது பிரபு அண்ணா........

கார்த்திகைப் பாண்டியன் said...

நான் சொல்லிக்கிட்டேதான் இருக்கேன் நண்பா.. இன்னும் நிறைய எழுதுங்க.. ரசிக்க வைக்கிறீங்க..:-))))))

Nikath said...

Waiting for you to continue... Taj

Post a Comment