அஜீத் & மீடியா


சென்றவார விகடனில் கவனித்த ஒரு பகுதி........ 

"பில்ட் அப் வேண்டாம்.: அஜீத் எச்சரிக்கை"  

சென்ற வாரத்துக்கான விகடனின் விளம்பரங்கள் அனைத்திலுமே இந்தக் கட்டுரை ஹைலைட் செய்யப் பட்டிருந்தது.... ரஜினியின் அட்டைப்படம் வேறு.....ஆக‌ இந்தவாரம் விகடன் செம சேல்ஸ்தான்.... என்று நினைத்துக் கொண்டு விகடனைத் திறந்தேன்....  

"என்ன... மறுபடியும் அஜீத் "எச்சரிக்கைகள்" விடுக்க ஆரம்பித்து விட்டாரா??"  

என எண்ணிதான் அந்தப் பேட்டியைப் படித்தேன்... படித்தபின் தலையில்தான் அடித்துக்கொள்ளத் தோணியது..... அது அஜீத்தின் பேட்டியே அல்ல!!! "அசல்" பட‌ இயக்குனர் சரணின் பேட்டி!!  

சரி அஜீத் ஏதேனும் "எச்சரிக்கை" விடுத்திருக்கிறார் என்று சரணாவது சொல்லியிருக்கிறாரா ?? என்று பார்த்தால் அதுவும் இல்லை....சரணையாவது தனிப்பட்ட முறையில் அஜீத் எச்சரித்திருக்கிறாரா என்றால் அப்படியும் இல்லை...... அட விடுங்க.... அஜீத் தன்னிடம் சொன்னதாக சரண் அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கும் அந்த வார்த்தைகளையே பாருங்க......  

// 'மக்கள்ல ஒருத்தனா என்னைக் காட்டுங்க. ப்ளீஸ்.... அநாவசியமான பில்ட் -அப் வேண்டாம்'னு என் தோள் மேல கை போட்டுச் சொன்னார் அஜீத்.//  

இது எப்படி பாஸ் "எச்சரிக்கை" ஆகும்??? பாவம் மனிதர் ஃப்ரண்ட்லியாக ஒரு வேண்டுகோள்தானே வைத்திருக்கிறார்....

பொதுவாகவே கவனித்திருக்கிறேன்........ சிலகாலம் முன்பு , எங்கெல்லாம் அஜீத்தின் பேட்டி வெளிவருகிறதோ.. அதற்குக் கீழ் எப்போதுமே "அஜீத் ஆவேசம்"...... "அஜீத் குமுறல்".... "உருமல்".... "எச்சரிக்கிறார் அஜீத்...... கொதிக்கிறார் அஜீத்" என்றெல்லாம் tags இருக்கும்..... அந்த பேட்டிகளையெல்லாம் படித்ததாக நினைவு இல்லை.......... ஆனால் ஒருமுறை சேனல் பேட்டி ஒன்றில் இது தொடர்பாக அவரிடமே ஒரு கேள்வி கேட்கப்பட்டது.... அதற்கு அவர்....  

" நானும் கவனித்திருக்கிறேன்... ஆனால் அந்தப் பேட்டிகளின் தலைப்புதான் அப்படிச் சொல்லும் அதையே உள்ளே வாசிச்சுப் பார்த்தீங்கன்னா.... அது ஒரு குமுறலாகவோ, எச்சரிக்கையாகவோ, ஆவேச உரையாகவோ இருக்காது.... நார்மலாதான் பேசியிருப்பேன்....சினிமா ஜர்னலிசத்துக்கு பரபரப்பு அவசியம் ஸோ நான் அவங்கள சொல்லி ஒண்ணும் இல்ல!!"

என்று ரொம்பவே பக்குவமாக, கேஷுவலாகச் சொன்னார் அஜீத்!! அவரின் அந்தப் பேச்சும் அணுகுமுறையும் என்னைக் கவர்ந்திருந்த‌ காரணத்தினால்தான் இந்த "எச்சரிக்கை"யைப் படித்ததும் பகிர்ந்துகொள்ள விழைந்தேன்...  

இந்தியக் கிரிக்கெட் அணியின் Assertive Captain (Sometimes Aggressive too!!) சவுரவ் கங்குலியின் கிரிக்கெட் கேரியரிலும் அவர் பேசியவற்றாலும், பேசியவ‌ற்றில் ரெண்டு மூன்று ஸ்பூன்கள் 'மிர்ச்சி' சேர்த்து மீடியாக்கள் ரிப்போர்ட் செய்ததாலுமே பல சிரமங்களுக்கு ஆளானார்.... சில சமயங்களில் அஜீத்திடமும், கஙகுலியிடமும் Personality ரீதியிலான சிற்சில ஒற்றுமைகளை அவ்வப்போது கவனித்திருக்கிறேன்...... ஆனால் கங்குலி மீடியாக்களிடம் often over exposed.... ஆனால் அஜீத்தோ அந்த விஷயத்தில் கொஞ்சம் ரிசர்வ்ட்தான்.... ஆனாலும் இருவருமே மீடியாக்களுக்கு எக்குத்தப்பாகத் தீணி போட்டவர்கள்!!

எது எப்படியோ... மீடியா என்னும் வார்த்தையின் அர்த்தம் "ஊடகம்".... "ஒலி"க்கு ஊடகம் காற்று... தாங்கிச் செல்ல காற்று எனும் "ஊடகம்" இருந்தால்தான் மலைமேல் நின்று கத்தினாலும் நம் ஒலி ஊருக்குக் கேட்கும்... பத்திரிக்கை, டி.வி போன்ற ஊடகங்கள் எல்லாம் காற்றைப் போலத்தான் செலிபரிட்டிகளுக்கு!! தான் தாங்கிவரும் செய்தி உண்மையா? பொய்யா? சாதகமா? பாதகமா? என்றெல்லாம் காற்றுக்குத் தெரியாது. (ஆனால் காற்று, தன்னிடம் சொன்னதை என்றும் திரித்து சொல்லாதுதான்!!!) கேட்கும் நம் காதுகள்தான் பகுத்துப் பார்க்க (பார்த்துத் தொலைய) வேண்டும்....  

அடுத்து "அஜீத் கர்ஜனை" என்று ஒரு பேட்டி வந்தாலும் நிச்சியம் வாங்கிப் படித்துப் பார்த்தால்தான் அது உண்மையான "கர்ஜனை"யா?? என்று தெரியும், அதுவும் அந்த பத்திரிக்கைக்கு லாபம்தான்!! ஆக எப்ப‌டி பாத்தாலும் அவர்கள் வியாபாரம் சக்சஸ்தான்.....!!  

ஆகமொத்தம் தமிழனுக்கு........ மெய்ப்பொருள் காண்பது "செலவு"!!
ஹ்ம்ம்ம்ம்.... என்னா வில்லத்தனம் :)  

(பிரபலங்களின் பேட்டிகளை விரும்பிப் படிப்பதும், Perrsonality Watching கிலும் ரொம்பவே ஈடுபாடு எனக்கு... அந்த வகையில் இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள எண்ணினேன்....)


அன்புடன்,


12 comments:

?!!!@#%* said...

ச‌ரியாக‌ அஜீத்தை புரிந்து வைத்து எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌திவு,

ந‌ன்றி,

ச‌ஹ்ரித‌ய‌ன்

சின்ன அம்மிணி said...

பத்திரகைகள் சென்சேஷனலா தலைப்பு வச்சாதான் விற்பனை ஆகும்ங்கறாங்க. என்னா பத்திரிக்கை தர்மமோ

பிரபு . எம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ச‌ஹ்ரித‌யன்...

Nice to meet you :)

பிரபு . எம் said...

ஆமா அக்கா... சில எழுதப்படாத விதிகள் இங்கே ஆழமா விதைக்கப் பட்டிருச்சு...
இந்த சென்சேஷனல் பிசினஸில் பாவம் அதிகம் பாதிக்கப் படுவது நடிகர்/ நடிகைகள்தான் நான் கவனித்தவரை...

தர்ஷன் said...

// சில சமயங்களில் அஜீத்திடமும், கஙகுலியிடமும் Personality ரீதியிலான சிற்சில ஒற்றுமைகளை அவ்வப்போது கவனித்திருக்கிறேன்...... //

இருவருமே தாம்தான் அசகாய சூரர்கள் பாணியில் பேசுவார்கள் ஒருமுறை கங்குலி இலங்கை அணியுடனான போட்டியில் இந்தியா 54 க்கு all out ஆன பின் அவருக்கான ரவி சாஸ்திரியிடம் பேசாமல் முறைத்துக் கொண்டு சென்றார். அஜித்தின் நான்தான் சூப்பர் ஸ்டார் கதைதான் ரொம்ப பிரபலமே பாவம் இப்போது நிலைமை உணர்ந்து அடக்கி வாசிக்க சொல்லிஇருக்கின்றார் என நினைக்கிறேன்.

பிரபு . எம் said...

வணக்கம் தர்ஷன்...

2006ல் நான் தான் சூப்பர்ஸ்டார் என்று அஜீத் சொன்னது தானே!!
ஆமாம்... அப்போது அவர் ஆரம்பித்து வைத்ததைத் தான் இப்போதும் பத்திரிக்கைகள் விடாது தொடர்கின்றன!!

பிரபு . எம் said...

இருப்பினும் பரபரப்புக்காக அவர் சொல்லததையும் சொல்வது எல்லாம் முறையல்ல..

க.பாலாசி said...

//மெய்ப்பொருள் காண்பது "செலவு"!!//

சரியா சொன்னீங்க தல....

பிரபு . எம் said...

நன்றி நண்பா :)

பூங்குன்றன்.வே said...

எனக்கும் தல தான் எப்பவும் ராசி.தல எப்பவும் கூல் தான்.

பிரபு . எம் said...

:-)

பிரபு . எம் said...

வாங்க பூங்குன்றன்...

உங்க ப்ளாக் படிச்சேன்... நீங்களும் ரொம்ப கூல் பர்சன் தான் :)
வாங்க பழகலாம் :)

Post a Comment