உங்களுக்குப் பிடித்தத் தமிழ்த் தொலைக்காட்சிப் பிரபலம் யார்? என்று கேட்டால் இப்போதெல்லாம் பெரும்பாலும் உச்சரிக்கப்படும் பெயர் விஜய் டி.வியின் கோபிநாத்! (ஆதாரம்: ஒரு பத்துபேர்கிட்ட கேட்டேன்!!) பல வீடுகளில் "நீயா? நானா?" நிகழ்ச்சியை விடாது பார்க்கிறார்கள்... நிகழ்ச்சியில் பேசுபவர்கள் அவரவரின் அலைவரிசையில் கருத்துகளை சொல்ல, விவாதத்தில் கிளம்பும் சூடு தணிந்து விடாமல், அப்படியே சுடுதண்ணியில் படகுவிட்டுக் கரைசேர்ந்திடும் லாவகத்தை நன்றாகவே அறிந்துவைத்துள்ளார் கோபிநாத் தன்னுடைய இந்த நீண்டகால அனுபவத்தில்...!
'ஹாய்'மதன், அனுஹாசன் வரிசையில் ஒரு வெயிட்டான விக்கெட்டாக இவரையும் விஜய் டி.வியும் நேரம் பார்த்துக் களமிறக்க ஆரம்பித்துவிட்டார்கள்... பர்சனலாக எனக்கு "நீயா? நானா?" நிகழ்ச்சியின் மீது எவ்வித ஈர்ப்பும் கிடையாது... இருப்பினும் சேனல் மாற்றும்போது கண்ணில் பட்டால், எரிச்சலைக் கிளப்புமாறு ஒருவர் பேசும் வரை பொறுமையிருந்தால் பார்ப்பேன்! (இம்சையக் கூட்ட எபிஸோடுக்கு ரெண்டுபேர் கண்டிப்பா இருப்பானுங்க!)
பத்துப் பதினைந்து வருடங்களாகத் தமிழ்த் (தனியார்த்) தொலைக்காட்சிகள் அசுர வேகத்தில் வளர்ந்து வந்திருந்தாலும், பெரும்பாலும் நம் சின்னத்திரை, பெரியத்திரை பெருசுகளின் 'பென்ஷன்' வாங்கும் களமாகத்தான் இருந்திருக்கிறது.... சன் டி.வியைத்தான் சொல்லவேண்டும்... அழகுப் பதுமைகளை வைத்து ஓட்டிவிடும் கமர்ஷியல் நிகழ்ச்சிகள் தவிர ஏதாவது டாக் ஷோ மாதிரி ஏதாவது என்றால் விசு, டி.ஆர் என்று கோடம்பாக்கத்திலிருந்து அழைத்து வந்து விடுவார்கள்... 'அறிவாளிகள்' என்கிற இமேஜோடு திரையுலகைவிட்டு ரிட்டையர்மெண்ட் வாங்கிக்கொண்டு இங்கு சின்னத்திரையில் விசுவின் வழித்தோன்றல்களாக லட்சுமி,ரேவதி,ரோகிணி,குஷ்பு எனறு வரிசையாக ஆளுக்கொரு டாக் ஷோவை எடுத்துக்கொண்டு கடையைத் திறந்தார்கள்... எல்லாம் ஆரம்பப் பரபரப்புக்களோடு புஸ்வானமாகிப் போனது கண்கூடு!!
உண்மையில் தொலைக்காட்சி மீடியம் என்பது முற்றிலும் வேற ஏரியா... விஷுவல் கம்யூனிக்கேஷன், ஜர்னலிசம் என்று முறைப்படி எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் படித்து வெளிவருகிறார்கள் இருப்பினும் வாரத்துக்கு ஒரு சேனல் துவங்கும் தமிழ் தொ.கா உலகில் இன்னும் டயட் மீறிய ஹீரொயின்களின் அழுகாய்ச்சி சீரியல்களும் சினிமா கிளிப்பிங்குகளும் மட்டுமே ஆக்கிரமித்துக் கிடப்பது நம் தலையெழுத்து!!
சரி நம்ம கோபியிடம் வருவோம்... ஒரு "மீடியா பர்சன்" என்கிற ரீதியில் மக்கள் மத்தியில் மேலோட்டமாக எதிர்பார்க்கப்படும் ஒருவித மிடுக்கு கோபிநாத்திடம் நிச்சியமாக உள்ளது.... அதாவது "மீடியா" என்கிற தோரணையில் எவரையும், எதனையும் 'கேஷுவலாக' அணுகும் பாங்கு என்று எளிதாகச் சொல்லலாம்.... (கட்சிக்காரர்கள் எல்லாம் ஆளுக்கொரு சேனல் ஆரம்பித்து வைத்திருக்கும் நிலையில் (ஸ்டார்) விஜய் டி.வியில் வேலை கிடைத்தது இவரிடம் இந்த 'மிடுக்கு' மிச்சம் இருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் என்பதை இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும்!!)
அரசியல் நிகழ்ச்சிகளில் ஆரம்பித்து தற்போது இவர் நிரந்தரமாக கோலொச்சிவரும் " நீயா? நானா?" வரை கோபிநாத்தின் வளர்ச்சி நிதானமானது.... நிறுத்தி நிதானமாக வளர்ந்து வந்து இப்போது வலுவாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் திரு.கோபிநாத், தொகுத்து வழங்குதலிலும் வர்ணனையிலும் விடாது தன் ஆளுமையால் கவர்ந்தாலும்... ஹோம் ஒர்க்கில் ரொம்பவே கோட்டை விடுகிறாரோ என்று தோன்றுகிறது....
இவரது நிகழ்ச்சிகளில் எடுத்தாளப்படும் தலைப்புகளை ஒட்டி எந்தளவு இவர் தன்னைத் தயார்படுத்திக்கொள்கிறார் என்பது நிச்சியம் கேள்விக்குறிதான்.... உதாரணமாக கிராமத்துத் திருவிழாக்களைப் பற்றி விவாதம் செய்யும் எபிஸோடில் சர்ச்சைக்குரிய நள்ளிரவு நடனங்களைப் பற்றி ஒருவர் சொல்ல "அப்படியா? என்று நிமிர்ந்து, எங்கே? எந்தப் பகுதியில்? .." என்கிற ரீதியில் புதிதாக கேட்கிறார்.... இந்த மேட்டர் எல்லாம் ஜு.வி, ரிப்போர்ட்டர், நக்கீரனில் எல்லாம் வந்து வந்து புளித்துப்போய் நடைமுறையாகிவிட்ட ஒன்றாச்சே....! இதுபோன்று பல சமயங்களில் கவனிக்க முடிகிறது அவரிடம், தலைப்பு சார்ந்த போதுமான ஆய்வு இல்லாததை.... அதேபோல் பேட்டியெடுக்கும்ப் போதும் சினிமா, அரசியல் என்றால் ஓரளவு ஓகே(அதுவும் தற்காலிக நிகழ்வுகளில்தான் ஸ்ட்ராங்காக இருக்கிறார்) அதுதவிர மற்ற துறை சார்ந்தவர்களைப் பேட்டியெடுக்கும்போது அவர்களைப் பற்றி இன்னும் அதிக ஆய்வுகள் மேற்கொண்டு கலக்க வேண்டும் இவர்....சிலகாலம் முன்பு இவர் எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பேட்டிகண்ட போது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது இலக்கியம் மற்றும் ஜெயகாந்தனின் எழுத்துக்களோடுமான இவரது பரிச்சியமின்மை.....
நம்பிக்கை தரும் ஒரு mighty wicket ஆக உருவெடுத்து வருவதற்கான ஸ்கோப் இருக்கிறது கோபிநாத்துக்கு அதை அவர் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாமே.....!!
கோபிநாத் போன்றோருக்கு அவர்களின் எதிர்கால செயல்பாடுகள் சிறப்பாக இருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்....
வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே!! ;-)
8 comments:
Good post Prabu keep it up
ஒன்றிரண்டு நீயா நானா பார்த்திருக்கிறேன். முழுக்க தமிழிலேயே பேச முயற்ச்சிப்பது சிறப்பு.
வணக்கம் சிவா..
மிக்க நன்றி...
உங்களுடைய நட்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி..
வாங்க அக்கா..
ஆமா... பேசவந்தவங்க யாராவது பீட்டர் விட்டாலும் "தமிழிலேயே சொல்லலாமே.." என்று அழகாக யதார்த்தமாக கோபியே கேட்டு வாங்கிவிடுகிறார்..... இந்நிகழ்ச்சியில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது ஒரு தனிச்சிறப்புதான் :)
neenga solvathu sariye, naanum kavanithirken erndu munnu vatti sothappi viduvar
Mavee...
Very nice meeting you Friend :)
நீங்களும் கவனித்திருக்கிறீர்களா..... கோபிநாத்தின Concept oriented தடுமாற்றம் கொஞ்சம் அடிக்கடி கண்ணில் படுவதாய்த் தெரிந்தது, ஆனால் ஒரு குறையாக மாட்டிக்கொள்ளாத அளவுக்கு மனிதர் தன் ஆளுமையால் தொடர்ந்து பயணித்து விடுகிறார்.. அதன் அடிப்படையில்தான் இந்த இடுகையை எழுதலாம் என்ற எண்ணம் தோன்றியது... தாங்களும் அதைக் கவனித்திருப்பது மகிழ்ச்சி... கருத்துரைக்கு மிக்க நன்றி friend....
Let's keep in touch :)
வணக்கம்........பிரபு அண்ணா உங்களுடைய எழுதும் ஆர்வத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுடைய ஒவ்வொறு பதிப்பும் ஒவ்வொறு விதம் வேறு வேறு கோணத்தில் பயணமாகும் கதைகளும் அதை கண் முன் காட்சிய படுத்தும் விதமும் மிகவும் அருமை அண்ணா. அதில் எனக்கு மிகவும் பிடித்தது ஏகநாயகி, தரிசனம்.
நட்புடன்,
ஸ்ரீதர்.
ooo0
( ) 0ooo
\ ( ( )
\_) ) /
(_/
"செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு." ( குறள் எண் : 781 )
சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு?
அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி
நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?
Thank you Sridhar.. :)
Post a Comment