"வறுமையின் நிறம் சிவப்பு" எனும் அற்புதமான திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் இதமான பாரதியாரின் காதல் கானம்!!"தீர்த்தக் கரையினிலே...ஷெண்பகத்தோட்டத்திலே.." என சுகமான வரிகளை.... வார்த்தைக்கு வலிக்காமல் ராகம் அமைத்திருப்பார் 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன்...
பாடல் வரிகள் பின்வருமாறு...
"தீர்த்தக் கரையினிலே தெற்குமூலையில்
ஷெண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் , அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடி..பார்த்தவிடத்திலெல்லாம் உன்னைப் போலவே
பாவை தெரியுதடி...ஆஆ... பாவை தெரியுதடி...
மேனி கொதிக்குதடி தலை சுற்றியே..வேதனை செய்குதடி..
வானில் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுதுபார்
மோனத்திருக்குதடி
இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே..
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ!!!"
இந்தப் பாடலை ராகத்தோடு Download செய்வதற்கான இணைப்பை விரைவில் இங்கு வழங்க முயற்சிக்கிறேன்...
தொடர்ந்து எனக்குப் பிடித்த பாடல்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்...
அடுத்தவாரம் உங்களை சந்திக்கிறேன்...
நட்புடன்,
பிரபு