இது சேவாக் ஸ்டைல் :-)



"ஆறடி உயரம்.... டயர்டே ஆக மாட்டான்.. பந்து எங்க குத்தும் எப்படி எகிறும் எதுவுமே தெரியாது.... 140 கிமீக்கு அஸால்டா பவுல் பண்ணுவான்.... பிட்சு வேற சரியல்ல... இந்த மேட்ச் ஜெயிச்சே ஆகணும்..... ரெண்டு நாளைக்கு பேட்டிங் பண்ணனும் ...தோத்துட்டா நம்பர் ஒன் ஸ்பாட் போயிடும்... கேர்ஃபுள்...கேர்ஃபுள்...."

இப்படி எச்சக்கச்சமாய் பில்டப்புகள் கொடுத்துக்கொண்டே போனாலும்  அலட்சியமாய்  இடைமறித்து "ஹலோ....சப்ப மேட்டர்..." என்று ஸ்டீய்னின் பந்தில் ஒரு பவுண்டரியை சுழற்றினால் அவர்தான் வீரேந்திர சேவாக்!!!

டெல்லி தந்த டேர்டெவில்.... கல்லியில் சிக்காத ஓப்பனிங் புயல்... (விகடன் ஸ்டைல்ல ட்ரை பண்ணேன் அவ்ளோதான்!!)

சச்சினின் முதுகுவலி ஒட்டுமொத்த தேசத்துக்கே தலைவலியாக இருந்த சமயம்.... அதிரடி சச்சின் இல்லாமல் ஓபனிங் இறங்கிய கங்குலியைப் பார்க்கவே பாவமாய் இருந்தது...... திடீரென உடன் இறங்கிய சேவக், ஏதோ அதிரடி காட்சிகளில் சச்சினுக்கு "டூப்" போடுபவர் போல் கிட்டத்தட்ட அதே பாவனையில் அவரை விட அதிவேகமாக பவுலர்களைப் பிரித்து மேய்ந்து 60+ பந்துகளில் சதம் தொட்டுக் காட்டினார்!!

ஆரம்பத்தில் சச்சினின் ரெப்ளிகாவாகவே பார்க்கப்பட்ட சேவக் பின்னாளில் கிரிக்கெட் பேட்டை வைத்து பிட்சில் டென்னிஸ் எல்லாம் ஆடிக்காட்டினார்..... எம் ஆர் எஃப் பேட்டில் மட்டுமே வாங்கிப் பழக்கப்பட்ட மரண அடியை புதியதொரு ஹீரோ ஹோண்டா பேட் வழங்கி வறுத்தெடுக்கத் துவங்கியது....

" இந்தியாவின் கேப்டனாகும் தருணத்திற்காகக் காத்திருக்கிறேன்..." என்று,  இந்திய அணியில் ஜொலிக்க ஆரம்பித்திருந்த காலத்திலேயே, முத்துதிர்த்து சர்ச்சையைக் கிளப்பியவர்... சமீபத்தில் தோணிக்குப் பதிலாக வங்கதேசத்தொடரில் ஒரு டெஸ்ட்டுக்குத் தலைமை தாங்கியபோது "வங்கதேசம் பலவீனமான அணி அவர்களால் இந்தியாவின் இருபது விக்கெட்டுகளை வீழ்த்தவியலாது எனவே தொடரை வெல்வது எளிது" என்று குட்டையைக் குழப்பினார்!!

பொதுவாக 99க்கும் 98க்கும் ஒரு ரன்தான் வித்தியாசம் ஆனால் 100க்கும் 99க்கும் ஒரு மைல்கல்லின் வித்தியாசம் உண்டு என்பது பொதுவாகவே இந்திய கிரிக்கெட்டின் நியதி!! நம்ம ஆளோ... 90க்குள் நுழைந்துவிட்டாலே எதிரணி மாற்றியமைக்கும் ஃபீல்டிங் வியூகங்களுக்கும், ஒவ்வொரு ரன்னுக்கும் ஆர்ப்பரிக்கும் ஆடியன்ஸ் அலறலுக்கும் எரிச்சல் பட்டு சனியன் பிடித்த சதத்தை சீக்கிரம் கடக்க்கிறேன் பார் என்று சிக்ஸருக்காக க்ரீஸைவிட்டு இறங்கி வரும் ஒரு தனி ரகமான ஆள்!!

எனக்கு சேவக்கைப் பிடிக்கும்.... முற்குறிப்பிட்ட அவரின் பேச்சுக்கள் "திமிர்" என்று வர்ணிக்கப்பட்ட போது கூட வங்கதேச அணி தற்போதைய  இந்திய அணியுடன் பார்க்கையில் ஒரு வலுவிழந்த அணி என்பது நிதர்சனம் தானே!!
கேப்டனாகும் ஆசையும் யாருக்குத்தான் இருக்காது!! அதை முன்கூட்டியே அறிவிப்பதில் "தவறு" என்று என்ன இருக்கிறது??

மேலும் பொதுவாக இப்படியெல்லாம் பேசுவது நம்மேல் நாமே சுமையைக் கூட்டிக்கொள்வது என்பதுதான் உண்மை!!
கேப்டனாகும் தருணத்திற்குக் காத்திருப்பதாக வந்த புதிதிலேயே பரபரப்பைக் கிளப்பிவிட்டு அடுத்த சீரீஸிலேயே அணியிலிருந்து நீக்கப் பட்டால் காலாகாலத்துக்கும் "டம்மி பீஸா"க நேரிடும் என்பதை அறிந்திருக்க மாட்டாரா?

 "வங்கதேசத்தால் இருபது விக்கெட்டுகளை  வீழ்த்த முடியாது" என்று வம்பிழுத்த அடுத்த நாளே இந்தியாவின் பத்து விக்கெட்டுகளை மளமள வென வீழ்த்திக் காட்டியது வங்கதேசம்..... அப்போதும் தன் முரட்டு பாவனையை மறைத்துக்கொள்ள முனையவில்லை சேவாக் .. அன்றைய ப்ரஸ்மீட்டிற்கு இணக்கமாக சச்சினை அனுப்பிவைத்தது அணி!! (சச்சின் அழகாக சமாளித்தது அவர் ஸ்டைல்!) அடுத்த இன்னிங்ஸில் சுதாரித்துக் கலக்கியது இந்தியா.. சேவக்கும் பேட்டிங்கில் கலக்கி கம்பீரமான கேப்டனாக நடந்து வந்தார் :)

பாம்புக்கு வாலையும், மீனுக்குத் தலையையும் காட்டித் தப்பிப்பிழைப்பதைப் பரிந்துரைக்கும் இன்றைய அவசர உலகில் புலிவாலை விரும்பிப் பிடிக்கும் சேவக்குகளையும் உலகம் ரசிக்கத் தவறுவதில்லை...!! They're Entertainers!!

 I mean.....There's no harm to try doing a Sehwag in our lives, at times, when there's room.... ;)

ப்ரியமுடன்,

12 comments:

சுடுதண்ணி said...

//
பாம்புக்கு வாலையும், மீனுக்குத் தலையையும் காட்டித் தப்பிப்பிழைப்பதைப் பரிந்துரைக்கும் இன்றைய அவசர உலகில் புலிவாலை விரும்பிப் பிடிக்கும் சேவக்குகளையும் உலகம் ரசிக்கத் தவறுவதில்லை...!! They're Entertainers!
//

அருமை :).. மிகவும் ரசித்தேன் :)

பிரபு . எம் said...

நன்றி நண்பா :)

nanrasitha said...

நல்ல பதிவு ரசித்தேன்

பிரபு . எம் said...

நன்றி திரு.செந்தில்குமார்... :)

கண்ணா.. said...

வர்ணனை அருமை தல...

நல்ல பதிவு....எழுத்து நடை அட்டகாசம்..

:)

பிரபு . எம் said...

வணக்கம் கண்ணா...
ரொம்ப நன்றி...
இப்போதான் உங்க பதிவு பார்த்தேன்...
தங்கள் துறையான கட்டுமானத் தொழிலைப் பற்றிய பதிவுகள் மிகப் புதுமை :)
தொடர்ந்து படிக்கிறேன் உங்களை :)

வெற்றி said...

சில வரிகளை ஹைலைட் பண்ணலாம் என்று பார்த்தால் அனைத்து வரிகளுமே மிக அருமை ! அதுவும் எனக்கு பிடித்த சேவாக்கை பற்றி....ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி...

தமிழிஷ்ல உங்க பதிவை இணைக்கலையா..?

பிரபு . எம் said...

ரொம்ப ரொம்ப நன்றி வெற்றி.. :)
சேவக்கின் ரசிகரா!! குட் குட்..
தமிழிஷ் பற்றி எனக்கு அதிகம் பரிச்சியம் கிடையாது வெற்றி.. தமிழ்மணத்தில் இணைப்பதோடு சரி :)

kavya said...

அருமை !!

பிரபு . எம் said...

நன்றி காவ்யா :)

D.R.Ashok said...

செம்மயா எழுதியிருக்கிங்க.. புல்லரிக்குது.. சேவாக் பேட்டீங் மாதிரி.. :)

cheena (சீனா) said...

I mean.....There's no harm to try doing a Sehwag in our lives, at times, when there's room.... ;)

இது எனக்குப் பிடிக்குது

நல்ல ரசிப்புத் தன்மை நிறைந்த இடுகை

நல்வாழ்த்துகள் பிரபு
நட்புடன் சீனா

Post a Comment